12] ஜகாத் ஒரு முறை என்றால்..
சான்றாய்வு -2
ஜகாத் ஆயுளில் ஒரு முறையா? ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு முறையா?
"ஜகாத் கொடு" என்று கூறினால், ஒரு முறைதான் கொடுக்க வேண்டும். காரணம், 'கொடு' என்றால், எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம் என அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.
'ஒரு முறை' என்பது ஆயுளில் ஒரு முறையா? ஒரு பொருளுக்கு ஒரு முறையா?
1. ஆயுளில் ஒரு முறைதான் என அர்த்தம் செய்தால், ஒருவன் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு ஆயுள் முழுவதும் அவன் ஜகாத் வழங்கத் தேவையில்லையா?
2. ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்றால், புதியதாக வரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் வழங்க வேண்டும். அப்போது 'ஜகாத் வழங்குதல்' என்ற செயல் ஆயுளில் பல முறை நிகழுகிறதே. 'கொடு' என்றால் அது 'ஒரு முறைதான்' என்ற அவர்களின் அடிப்படையான வாதத்திற்கு நேர் எதிராக உள்ளது.
மீண்டும் ஜகாத் கோரி அபூ பக்கர்(ரலி) தொடுத்த போர் அநியாயமானதா?
ஏற்கனவே நபியவர்களிடம் ஜகாத்தை வழங்கி இறைக்கட்டளையை செயல் படுத்தி வந்த சிலர், நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஜகாத் வழங்க மறுத்த போது, அபுபக்கர்(ரலி) அவர்கள், போர் தொடுத்து ஜகாத்தை வசூல் செய்தார்கள்.
'ஜகாத்கொடு' என்ற வசனத்திற்கு ஒரு முறை கொடுப்பதுதான் என அர்த்தம் செய்தால், அபூபக்கர் அவர்கள் தொடுத்த போர் அநியாயம் என்றாகிவிடுமல்லவா?. இதற்கு சகோதரர்கள் தருவார்களா?
3. ஒரு பொருளுக்கு ஒரு முறை எனக்கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் நபரும் கொடுத்து விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால், இறைத்தூதரின் காலத்திலும், அபூபக்கரின் ஆட்சி காலத்திலும், சிலர் ஜகாத் வழங்க மறுத்தது ஏன்? ஒரு பொருளுக்கு ஒருமுறைதான் ஜகாத் எனில், யாரும் மறுத்திருக்கமாட்டார்கள் அல்லவா?
நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடு எனக் கேட்டதால் தானே கொடுக்க மறுத்தர்.
எனவே, நபி (ஸல்) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோரின் ஆட்சி காலத்தில் ஒரு பொருளுக்கு திரும்ப திரும்ப ஜகாத் வழங்குவதுதான் நடைமுறைச் சட்டமாக இருந்து வந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

<< Home