Friday, October 21, 2005

ஜகாத் ஒரு மறு ஆய்வு - அட்டவணை

ஒரே சொடுக்கில் அத்தனை பக்கங்களையும் படிக்கவும், அச்செடுக்கவும் வசதியாக உள்ள கோப்பினை பெற்றுக்கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

1] ஜகாத் ஒரு மறு ஆய்வு - முன்னுரை

2] அடிப்படைத் தூண் ஜகாத்

3] இவர்கள் கூறும் ஆதாரங்கள்

3-1] திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று

4] நபித்தோழரின் கூற்றை மறுப்பதேன்?

5] பலவீனம் என்பதற்கான சான்றுகள்

6] விடுபட்டுள்ளார் என்பதே சரியானது

7] மற்றொரு கோளாறு

8] இந்நபிமொழி அவர்களுக்கு சான்றாக அமையாது

9] மனிதனைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத்

10] கூடுதல் சான்றாக

11] மனிதனைத் தூய்மைப் படுத்தும் பிற கடமைகள்

12] ஜகாத் ஒரு முறை என்றால்..

13] ஜகாத் ஹஜ்ஜைப் போன்றதா?

14] விளைபொருளும் மற்ற செல்வங்களும் ஒன்றா?

15] பிச்சைக்காரனாகிவிடுவானா?

16] பல்டி அடிக்காதீர்!

17] வளர்ச்சியே ஏற்படுகிறது

18] வறுமை குறித்து அச்சுறுத்துவது யார்?

19] எளிமையான(?) சட்டம் கூற வேண்டுமா?

20] வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்

21] அபூதாவூதில் இடம் பெற்ற பலவீனமானதா?

22] உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை

23] உண்மைக்குப் புறம்பானவைகள்

24] முரண்பாடுகள்


இச்சிறிய நூலை எந்தவித ராயல்டி பெறாமலும், copyrights செய்யப்படாமலும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும்படி அச்சிட விரும்புகிறேன். விருப்பமுள்ள இஸ்லாமிய முன்னனி புத்தக வெளியீட்டாளர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு:
மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்: 0509746919
(00966 50 9746919)

மின்னஞ்சல்: fazilbaqavi@gmail.com

24] முரண்பாடுகள்

முரண்பாடு-1

வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுபவர்களால், ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும் என்பதை சான்றுடன் நிரூபிக்க முடியவில்லை. அதனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். வருடா வருடம் வழங்க வேண்டும். கணக்குப் பார்க்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும் என்று பலவாறு கூறுகின்றனர்.

கணக்குப் பார்க்கும் போதுதான் ஜகாத் வழங்க வேண்டும் என்றால் ஒருவர் கூட ஜகாத் வழங்க மாட்டார். ஏனெனில், கணக்குப் பார்த்தால்தானே ஜகாத் வழங்க வேண்டும். அதற்கு கணக்கு பார்க்காமலேயே இருந்துவிடலாம் என்று எண்ணி யாரும் கணக்குப் பார்க்கவும் மாட்டார். ஜகாத் வழங்கவும் மாட்டார்.

1. தினமும் கணக்குப் பார்த்து கொடு என்று சொல்வதாக இருந்தாலும், அதற்கு என்ன ஆதாரம்?

2. புதிதாக வரும் செல்வத்திற்கு உடனே ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?

புதிதாக வரும் செல்வத்திற்கும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறுவோர் பின் வரும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அ) இன்று ஒருவனிடம் பத்து லட்சம் இருந்தது. 25 ஆயிரத்தை அதற்கான ஜகாத்தாக வழங்கி விட்டு, மீதி உள்ள ரூ9.75 லட்சத்தில் புதிய சொத்து வாங்கினான். இந்த புதிய சொத்துக்கு அவன் எப்போது ஜகாத் வழங்க வேண்டும். சொத்து வாங்கிய அன்றே வழங்க வேண்டுமா? அவ்வாறெனில் பத்து லட்சத்திற்கு ஜகாத் வழங்கி 24 மணி நேரம் கூட முடியாத நிலையில் அவன் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறுவது அநீதி இல்லையா? அவ்வாறு இஸ்லாம் கூறுகிறதா?

ஆ) அது போன்றே, அறுவடை செய்த நூறு மூட்டை விளைபொருளில் பத்து மூட்டையை ஜகாத் வழங்கி விட்டு, அன்றைய தினமே மீதி உள்ளதை விற்பனை செய்ததன் மூலம் இப்போது புதிதாக பணம் வந்துள்ளது. புதிதாக கிடைத்த இப்பணத்திற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டுமா? அது எப்போது?. ஜகாத் இல்லை எனில் புதிதாக வந்ததற்கு ஏன் ஜகாத் இல்லை? புதிதாக கிடைத்ததற்கு ஜகாத் உண்டு/இல்லை எனக் கூற என்ன அளவு கோல்?

முரண்பாடு -2

"ஒரே பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் கொடு என்று கூறினால், ஒரு இலட்சம் வைத்திருப்பவன் செல்வத்தை சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்யாது விரைவிலேயே பிச்சைக் காரனாகிவிடுவான்" எனக் கூறிய சிலவினாடிகளில், 'பொருளாதாரம் என்றாலே சுழற்சிமுறையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கும். ஒரு பக்கம் கூடும். ஒரு பக்கம் குறையும். கூடுதலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் புதிய செல்வத்திற்கு ஜகாத் வழங்கிக் கொண்டே இருப்பான்." என முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்கள்.
ஜகாத் தொடர்ந்து கொடு என்று கூறினால் செல்வத்தை சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்யமாட்டானாம். ஒரு முறை கொடு என்று கூறினால் சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்வானாம்? மாஷா அல்லாஹ் என்னே ஆய்வு?

இது போன்ற இன்னும் ஏராளமான முரண்பாடுகள் அவர்களது உரைகளிலும் எழுத்துக்களிலும் மலிந்து கிடக்கின்றன. அதனைப் பார்வையிடுவோர் நாம் கூறுவது உண்மை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்வார்கள்.

இறுதியாக இவர்களுக்கு இறைவன் கூறிய எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

ஜகாத் கொடுக்க வேண்டாம் அவ்வாறு கொடுத்தால் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவீர்கள் என்று கூறுவது, மக்களை கஞ்சர்களாக மாற்றும் முயற்சியாகும். அவ்வாறு செய்ய முனைவோர் பின்வரும் வசனத்தில் உள்ள எச்சரிக்கையை சற்று கவனத்தில் கொள்ளட்டும்.

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَاباً مُهِيناً) (النساء:37)

"தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளை மறைக்கும் இறை மறுப்பாளர்களுக்கு, இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்து வைத்துள்ளோம். (4:37)

அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை ஏற்று நடப்பவர்களாக நம் அனைவரையும் ஆக்க வேண்டும். தீமைகள் செய்யத் தூண்டும் ஷைத்தான் மற்றும் தீய நஃப்ஸிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வோம்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

23] உண்மைக்குப் புறம்பானவைகள்

ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என குர்ஆனிலோ நபிமொழியிலோ கூறப் படவில்லை என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறியதால் அதனை மறைக்க அது போன்ற உண்மைக்கு புறம்பான பல தகவல்ளைக் கூற வேண்டிய நிர்பந்தமும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு ஏற்பட்டது.

அவ்வாறு உண்மைக்கு புறம்பான எத்தனை தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர், எவ்வாறெல்லாம் முன்னுக்குப் பின் முரண்பட்டு பேசியுள்ளனர் என்பதற்கான சுருக்கமான பட்டியல் இதோ!

புறம்பானது -1
"பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்" என இறைத்தூதர் கூறியதாக கூறுவது. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிய மாபெரும் பொய்யாகும். என்பதை சான்றாய்வு -1ல் தெளிவாக விவரித்துள்ளோம்.

புறம்பானது -2
'ஹஜ் ஒரு முறைதான்' என குர்ஆனிலும் நபி மொழியிலும் குறிப்பிடவில்லை.'
இது தவறான செய்தியாகும். ஏனெனில், ஹஜ் ஒரு முறைதான் என நபி மொழியில் காலம் குறிக் கப்பட்டுள்ளது என்பதை தக்க ஆதாரத்துடன் சான்றாய்வு -3ல் குறிப்பிட்டுள்ளோம்.

புறம்பானது -3
'வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என உலகில் உள்ள எந்த நூலிலும் கூறப்படவில்லை.'
ஹதீஸ் நூட்களை பார்வையிட நம்மை தவிர வேறுயாரும் இல்லை என்ற இறுமாப்பில் கூறப்பட்ட பொய்யாகும். இதற்கான பதிலை சான்றாய்வு -7ல் குறிப்பிட்டுள்ளோம்.

புறம்பானது -4
"ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறு பான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்"

இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னுஹஸ்மின் மீதுபொய் யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன?. உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிட வில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.

والزكاة تتكرر في كل سنة في الإبل, والبقر, والغنم, والذهب والفضة, بخلاف البر والشعير والتمر فإن هذه الأصناف إذا زكيت فلا زكاة فيها أبداً........وهذا لا خلاف فيه من أحد........ (المحلى:ج6/23)

"ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை." (அல் முஹல்லா பாகம்: 6/23).

இப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற் குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.

திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று!

"ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறு பான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்"

இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னு ஹஸ்மின் மீது பொய்யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன? உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.

والزكاة تتكرر في كل سنة في الإبل, والبقر, والغنم, والذهب والفضة, بخلاف البر والشعير والتمر فإن هذه الأصناف إذا زكيت فلا زكاة فيها أبداً........وهذا لا خلاف فيه من أحد........ (المحلى:ج6/23)

"ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறு பாடு இல்லை." (அல் முஹல்லா பாகம்: 6/23).

இப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற்குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.

இப்னு ஹஸ்மின் கூற்று!

"மேய்ந்து திரியாத கால்நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால், அதற்கு ஜகாத் இல்லை" எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகிறார்.

இப்னு ஹஸ்மின் கேள்விக்கணை!


قال أبو محمد( إبن حزم)... قد ثبت أن رسول الله e كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة. . فخروج المصدقين في كل عام موجب أخذ الزكاة في كل عام بيقين. فإذا لاشك في ذلك, فتخصيص بعض ما وجبت فيه الزكاة عاماً بأن لايأخذ المصدق الزكاة عاماً ثانياً تخصيص النص, وقول بلا برهان.(المحلى ج6/28ص)

"ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜகாத் வசூலிப்போரை, ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்துப் பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதையே தெளிவு படுத்துகிறது. இந்நிலையில், முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (இக்கூற்றினை ஏற்க இயலாது.) (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)

ஒவ்வொரு வருடமும் ஜகாத் வசூலிப்போரை நபி (ஸல்) அனுப்பி வைக்கும் போது, கடந்த ஆண்டு ஜகாத் வாங்கி விட்டதற்கு திரும்ப ஜகாத் வாங்காதீர்கள் எனக் கூறி அனுப்பியதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் வழங்கப்பட்டது, வழங்கப்படாதது எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் அதற்கான சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என இப்னு ஹஸ்ம் கேட்பது அவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே கேட்கிறது.

தீனி போட்டு வளர்க்கப்படும் கால் நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் வழங்கினால் போதும் என்ற இந்தச் செய்தியைத்தான் திரித்து ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு திரும்ப ஜகாத் இல்லை என்று கூறுவோர் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர் என பேசி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல் அந்நூலில் இருந்தால் அதன் அரபி வாசகத்துடன் எழுதி வெளியிடத் தயாரா?

22] உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை

இந்நபி மொழியை உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை.

வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் இந்நபி மொழியை நபித்தோழர்களின் நடை முறைகளும் உறுதி செய்கின்றன.

நபித் தோழர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை அறியும் முன், நபி(ஸல்)அவர்களின் ஆட்சி காலத்திலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலத்திலும் ஜகாத் வழங்கும் முறை எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதை சற்று அறிந்து கொள்வோம்.

நாம் தற்காலத்தில் ஜகாத் வழங்கி வருவது போன்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் போன்று தனித்தனியாக ஜகாத் வழங்க அப்போது அறவே அனுமதி இல்லை. மாறாக, ஆட்சித் தலைவர் இதற்கென ஆட்களை நியமனம் செய்து, அவர்கள் மூலம் ஜகாத்தை மொத்தம் திரட்டி அதற்குரிய வழிகளில் (பார்க்க:9:60 வசனம்) வினியோகம் செய்வதே சட்டமாக இருந்து வந்தது. அதாவது ஜகாத்தை வசூலித்து, வினியோகம் செய்வது அரசின் கடமைகளில் ஒன்றாகவே இருந்து வந்தது.

இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் ஆட்சி காலங்களில், ஜகாத் வசூல் எவ்வாறு நடை பெற்றது? ஒரு மணிக்கு ஒரு தடவையா? தினமும் ஒரு தடவையா? வாரம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா? வருடம் ஒரு முறையா? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு செயல் வடிவம் தந்த முதல் சமுதாயம் நபித்தோழர்கள்தான். அவர்களது நடைமுறைகள் சில சட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கமாக அமையும்.

இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்களின் காலத்தில் ஜகாத் வசூல்:

7151 وأخبرنا محمد بن موسى بن الفضل ثنا أبو العباس(محمد بن يعقوب) أنبأ الربيع (بن سليمان بن عبد الجبار المرادي أبو محمد المصري) أنبأ الشافعي أنبأ إبراهيم بن سعد عن بن شهاب قال إنّ أبا بكر وعمر رضي الله عنهما لم يكونا يأخذان الصدقة مثناة ولكن يبعثان عليها في الجدب والخصب والسمن والعجف لأن أخذها في كل عام  من رسول الله  صلى الله عليه وسلم سنة. رواه البيهقي واللفط له وإبن أبي شيبة ومسند الشافعي .( صحيح الإسناد)

இப்னு ஷிஹாப் கூறுகிறார்:

"அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும், (இரு வருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்)இரட்டிப்பாக்கி எடுப்பதில்லை. மாறாக, செழிப்பான காலத்திலும் வறட்சியான காலத்திலும் (ஒவ்வொரு வருடத்திற்குரிய) ஜகாத்தினை (அந்த ஆண்டிலேயே) வசூலிப்பதற்காக (ஆட்களை) அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஒவ்வொரு வருடமும் அதனை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்." (பைஹகி, முஸன்ஃப் இப்னி அபீ ஷைபா. முஸ்னத் ஷாஃபி. (குறைகூற முடியாத சரியான அறிவிப்பாளர்கள் தொடரைக் கொண்ட செய்தியாகும்.)

"மதீனாவில் ஆட்சி புரிந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரில் யாரும் (இருவருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்) இரட்டிப்பாக்கி வசூலித்ததாக யாரும் அறிவிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பி (வசூலித்துக்) கொண்டிருந்தார்கள்" என முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா என்ற ஹதீஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

முதல் மூன்று கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் ஜகாத்தை வருடா வருடம் வசூலித்து வந்துள்ளார்கள். இது அவர்களாக எடுத்துக் கொண்ட முடிவல்ல. இறைத்தூதர் காட்டிய வழி முறையின் அடிப்படையில்தான் இதை செயல்படுத்தி வந்தார்கள் என்பதை இச்செய்தியின் இறுதியில் இடம் பெற்ற (ஒவ்வொருவருடமும் அதை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழி முறையாகும்) என்ற வாசகமும் உறுதிப்படுத்துகிறது.

ஜகாத்தை வசூலிப்பதற்கு இறைத்தூதர் ஆட்களை அனுப்பி வைத்த செய்தி எல்லா ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதை இறைத்தூதர் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் அறிந்தே இருப்பர். அதைத் தான் மேற்கண்ட செய்தி உறுதிப்படுத்துகிறது. மேலும், மாபெரும் இமாமான ஷாஃபி அவர்களின் அர்ரிசாலா என்ற நூலிலும், இப்னு ஹஸ்ம் அவர்களின் அல்முஹல்லா என்ற நூலிலும் இடம் பெற்றிருக்கும் செய்திகளும் இதையே உறுதிசெய்கின்றன.

ثم كان مانقلت العامة عن رسول الله e  في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة..   (الرسالة للإمام الشافعي)

"கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்." (அர்ரிசாலா)

قال أبو محمد( إبن حزم)... قد ثبت أن رسول الله كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة.(المحلى)

"ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)

"வருடா வருடம் ஜகாத்தை வசூல் செய்வது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்" என்ற செய்தியும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் வருடா வருடம் ஜகாத் வசூலித்து வந்தார்கள் என்ற செய்தியும் அபூதாவூதில் இடம் பெற்ற "வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்" என்ற நபி மொழியை உறுதிப்படுத்துகிறது.

மேலும், நிஸாப் அளவு செல்வம் ஒருவனிடம் இருந்தால் அவன் மீது உடனே ஜகாத் கொடுப்பது கடமை இல்லை. ஒரு வருடம் கழித்து கொடுப்பதே கடமை என்பதும் இங்கே புரிந்து கொள்ளப்படுகிறது.

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளின் மூலம், குறிப்பிட்ட(நிஸாப)ளவு செல்வம் வைத்திருப்பவர் வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள்.

ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் அல்லது நபி மொழியில் கூறப்பட்டுள்ளதா? என கேட்கும் புத்திசாலிகளின்(!) கவனத்திற்கு.

குர்ஆனையும் நபி மொழியையும் சரியாகப்புரிந்து அதனை அப்படியே நடை முறைப்படுத்துவோரில் முதலிடம் வகிப்போர் நபித்தோழர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. காரணம் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்ளுக்கு உடனுக்குடன் இறைத்தூதரிடம் விளக்கங்களை நேரிடையாகக் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டவர்கள். எனவே, ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு ஹதீஸை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அது போன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களைவிடவும் நாம்தான் சரியான விளக்கம் அளிப்போம். ஒட்டு மொத்த நபித்தோழர்களும் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என ஒருவர் கூறினால், அது அவரது அறிவீனமாகும்.

இவ்வுண்மையைப் புரிந்து கொண்டு 'ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற நபி மொழியை நபித்தோழர்கள் எவ்வாறு செயல்படுத்தி வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வோம். இது ஜகாத் பற்றிய இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

நபித் தோழர்கள் தவறாகவும் புரிந்து கொள்வார்கள் என சம்பந்தமில்லாத சில உதாரணங்களைக் காட்டி, பொத்தாம் பொதுவாக பேசிவரும் சிலர், தாம் புரிந்து கொள்வதில் தவறே ஏற்பாடாதது போல் நடந்து கொள்கிறார்கள். அதனால், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித் தோழர்களுக்கும் தவறுகள் ஏற்படும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பதை ஒருவரும் ஏற்க மாட்டர்.

இப்னு உமர் அவர்கள்:

أخبرنا سفيان عن أيوب عن نافع عن بن عمر ثم أنه كان يزكي مال اليتيم(رواه الشافعي في مسنده)

நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
இப்னு உமர் அவர்கள் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி.)

عن ابن جريج قال أخبرني موسى بن عقبة عن نافع أن عبد الله بن عمر كانت تكون عنده أموال اليتامى .... يخرج زكاتها كل عام من أموالهم.(عبد الرزاق)

நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் வசம் அனாதைகளின் செல்வம் இருந்து வந்தது........ அவற்றில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்கி வந்தார்கள். (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்).

அனாதைகளின் செல்வத்தில் வருடா வருடம் இப்னு உமர் ஜகாத் கொடுத்து வந்த செய்தி சாலிம் என்பவரின் மூலம் முஸன்னஃப் இப்னி அபீ ஷைபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(ஜகாத் வழங்குவது பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துகிறது என புகாரியில் இடம் பெற்ற செய்தியை கூறியவர் இவர்தான். அவ்வாறு கூறியவரே, திரும்ப திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் புரிந்து, அதனைச் செயல்படுத்தி வந்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இப்னு உமர் கூறியதில் தங்களுக்கு சாதகமானதை மட்டும், எடுத்துக் கொண்டு தம் கருத்துக்கு எதிரானதை புறக்கணிப்பது பச்சோந்தி தனம் என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது?

ஆயிஷா (ரலி) அவர்கள்:

 أخبرنا سفيان عن يحيى بن سعيد عن القاسم بن محمد يقول: كانت عائشة تزكي أموالنا ونحن أيتام في حجرها.رواه البيهقي ومسند الشافعي والمحلى عن طريق أحمد بن حنبل.
 عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أنه قال كانت عائشة تليني وأخا لي يتيمين في حجرها فكانت تخرج من أموالنا الزكاة رواه مالك

காசிம் பின் முஹம்மது அவர்கள் கூறுகிறார். "நாங்கள் ஆயிஷா அவர்களிடம் அனாதைகளாக வளர்ந்து வந்தோம். எங்களின் செல்வத்தில் ஆயிஷா அவர்கள் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (பைஹகி, அல் முஹல்லா, முஸ்னத் ஷாஃபி, முஅத்தா மாலிக்).

இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்துள்ளனர் என்பது நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். தொடர்ந்து வழங்குவது என்றால், கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினார்கள் என்று தானே அர்த்தம். ஏனெனில் அனாதைகளின் செல்வத்தில் புதியது வர வாய்ப்பில்லை. தன் கைவசம் இருந்து வந்த பொருளுக்குத்தான் திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கி வந்துள்ளனர். இப்னு உமர் பற்றிய ஒர் அறிவிப்பில் 'ஒவ்வொரு வருடம்' என்ற மிகத் தெளிவான வார்த்தை இடம் பெற்றுள்ளது.

உமர் உட்பட பல நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபி மொழியை, ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும் என்று புரிந்துதான் செயல்படுத்தி வந்துள்ளார்கள்.

ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்குவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானது என்றிருந்தால், இறைத்தூதரின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற ஆசை கொண்ட இப்னு உமர், ஆயிஷா ஆகியோர் தம்மிடம் வளர்ந்த அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி அவர்கள் ஏழையாகிட (இவர்களின் கருத்துப்படி) காரணமாக இருக்கமாட்டார்கள்.

இந்த நபித்தோழர்கள் செயல் படுத்தியது அவர்களின் சொந்தக் கருத்து. அதனை ஏற்க முடியாது என்றெல்லாம் தட்டிக் கழிக்கவும் முடியாது. மார்க்கத்தில் புதிய ஒரு சட்டத்தை தன் சுய விருப்பப்படி உண்டாக்கி அதை செயல்படுத்தக் கூடியவர்களல்லர் நபித்தோழர்கள். தங்களின் எல்லா செயல்களுக்கும் இறைத்தூதரின் முன் மாதிரியை வைத்தே செயல்படுவார்கள் என்பது உரிய இடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

அனாதைகளின் செல்வத்திற்கே திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள் நிச்சயமாக தமது செல்வத்திற்கும் அவ்வாறுதான் ஜகாத் வழங்கி வந்திருப்பார்கள் என்பதில் எள் முனையளவுகூட சந்தேகம் கொள்ள முடியாது.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்குவதுதான் நபிவழி. இதில் 'ஏற்கனவே வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. நபித்தோழர்கள் இதனை தங்களது வாழ்வில் செயல்படுத்தியும் வந்துள்ளனர். எனவே, ஒரே பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று தனியாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

பாரபட்ச மின்றி சிந்திப்போருக்கும் உண்மையைப் உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுவோருக்கும் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும். அல்லாஹ் அனைவருக்கும் சத்திய வழியைக் காட்டி, அதன்படி நடப்பதற்கு அவனது பேரருளைப் பொழிந்திட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.

21] அபூதாவூதில் இடம் பெற்ற பலவீனமானதா?

அபூதாவூதில் இடம் பெற்ற இந்நபி மொழி பலவீனமானதா?

"வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்" என்று நபி மொழியில், அபூ தாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரீக் அல்கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமா னவர்கள் இடம் பெற்றுள்ளதால், அவற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.

(வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று உலகில் எந்த நூலிலும் ஹதீஸ் இல்லை. எடுத்துக் காட்டுவோருக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு' என்று அறிவிப்புச் செய்தார்கள். ஆனால், அபூதாவூதில் உள்ள இந்த ஹதீஸை எடுத்துக் காட்டிய போது அதனை பலவீனம் என்று கூறக் காரணம் தேடுகிறார்கள்.)

பலவீனம் என்று கூறுவோர், இந்நபி மொழியின் மீது மூன்று குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அக்குற்றச்சாட்டுகளையும், அதற்கான பதிலையும் விரிவாக அறிந்து கொள்வோம்.

قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحرث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري

குற்றச்சாட்டு -1

'கோடிட்டு காட்டப்பட்ட யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடம் நேரிடையாக இந்த ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்விருவருக்குமிடையில் அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்டுள்ளார். அதனால் அது தொடர்பறுந்த(முன்கதிஃ) ஹதீஸாகும்.' ஆகையால், இது பலவீனமானது.

பதில் -1
ஸஹீஹ் என்பதனை சரிகாணல்:

அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பது உண்மையே. எனினும், அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதால் மட்டும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு வரக்கூடாது. விடுபட்டவர் யார்? என அறவே தெரியவில்லை அல்லது விடுபட்டவர் பலவீனமானவர் என கண்டுகொள்ளப்பட்டது போன்ற சூழ்நிலையில் மட்டும் அந்த நபி மொழி பலவீனமானது என்று உறுதியாக முடிவு எடுக்க முடியும்.

விடுபட்டவர் நம்பகமானவர் என வேறு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளப்படுமேயானால், அல்லது வேறோர் தொடரில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருந்தால் அப்போது அதனை பலவீனமானது என ஒதுக்கிவிட முடியாது.

அபூதாவூதில் உள்ள நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்குமிடையில் விடுபட்டவர், அப்துர்ரஹ்மான் என்பவர் ஆவார் என்பதை வேறு நூட்களில் இடம் பெற்ற அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 'இவர், இதே அறிவிப்பில் இடம் பெற்ற ஜுபைர் என்பவரின் மகனாவார். இவர் நம்பகமானவர்' என ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆகையால், இது ஸஹீஹானது தான் என இக்கலை அறிஞர்கள் பலரும், குறிப்பாக சமீபத்தில் தோன்றிய ஹதீஸ் ஆய்வாளர்களில் சிறந்து விளங்கும் நாஸிருத்தீன் அல்பானியும் ஏற்றுள்ளனர். அர்னாவூத் என்பவர் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது எனக் கூறுகிறார்.

மேலும், அபூதாவூதின் இன்னொரு ஒரிஜினல் பிரதியில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர்ச்சியா கவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் தன் வசம் இருந்து வந்த வேறொரு மூலப் பிரதியின் மூலம் 'அல் இஸாபா' என்ற தனது நூலில் இனம் காட்டியுள்ளார். "நமது கைவசம் உள்ள அபூ தாவூதின் பிரதிகளில் எழுதுவோர் தவறினால் அப்துர் ரஹ்மான் விடுபட்டுள்ளார். 'இஸாபா' என்ற நூலில் இப்னு ஹஜ்ர் அவர்கள் எடுத்துக் காட்டிய அறிவிப்புதான் சரியானதாகும்" என அபூதாவூதின் விரிவுரையாளர், 'அவ்னுல் மஃபூத்' எனும் தனது நூலில் இதை உறுதிப்படுத்துகிறார். (இஸாபா என்ற நூலையும், அவ்னுல் மஃபூத் என்ற நூலில் மேற்கூறிய நபி மொழியின் விளக்க உரையையும் காண்க!)

மேற்கண்ட விளக்கத்தின்படி அறிவிப்பாளர் தொடரில் யாரும் விடுபடவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, அபூதாவூதில் இடம்பெற்ற ஹதீஸ் முன்கதிஃ (தொடர்பறுந்தது) எனக் காரணம் காட்டி பலவீனமானது என்று ஒதுக்க முடியாது.

குற்றச்சாட்டு-2

"அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறு கின்றார். அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை. ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும். மேலும் அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாக வில்லை என்று கூறுகின்றார். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது."

அம்ர் பின் ஹாரிஸ் நேர்மை நிரூபணமாகாதவாரா?

ஸஹீஹ் என்பதனை சரிகாணல்:

'அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணம் ஆக ல்லை' என தஹபி கூறுவதாக அவர்கள் எழுதிய தகவல், உண்மைக்குப் புறம்பானதாகும். தஹபி அவர்கள் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. மாறாக 'மீஜானுல் இஃதி லால்' என்ற நூலில் அவர் கூறியதை திரித்து மொழி பெயர்த்துள்ளனர். தஹபி கூறிய வாசகம்:

لا تعرف عدالته))

அவரது நேர்மை அறியப்படவில்லை.

'நேர்மை அறியப்படவில்லை' என்ற வாசகத்திற்கும், 'நேர்மை நிரூபணமாக வில்லை' என்ற வாசகத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. 'அறியப்படவில்லை' என்ற வாசகத்தின் மூலம் நம்பகமானவரா? என்பது தஹபிக்கு தெரியாது என்றே புரிந்து கொள்ளப்படும். 'நிரூபணம் ஆகவில்லை' என்று அர்த்தம் செய்வதாக இருந்தால்,

(لاتـثبت عدالته)

என்று கூறி இருக்க வேண்டும். அவ்வாறு தஹபி அவர்கள் ஒரு இடத்திலும் கூறவில்லை. பொய்யுரைக்கக் கூடியவர், மனன சக்தி குன்றியவர், மறுக்கப்பட வேண்டியவர் போன்ற அவரை குறைப்படுத்துகின்ற காரணங்களையும் தஹபி அறியவில்லை. எனவேதான், 'அவரது நேர்மை அறியப் படவில்லை' என்று கூறி முடித்துக் கொண்டார்.

மேலும், ஹிஜ்ரி 720ல் தங்களது 48வது வயதில் எழுதிய அல் காஷிஃப் என்ற நூலில் 'அமர் பின் ஹாரிஸ் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார்' என்று பதிவு செய்து, தனது முந்திய கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இச்செய்தி அவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் வசதியாக அதை மறைத்தே விட்டார்கள். காஷிஃபில் பதிவான செய்தி இதோ!

 عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د  الكاشف ج2/ص73

.... அம்ர் பின் ஹாரிஸ் ...நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். அல் காஷிஃப். 2/73

(தொழுகையில் விரல் அசைப்பதற்கு இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸை அறிவிக்கக்கூடிய 'குலைப்' என்பவரின் நம்ப கத்தன்மையை (وثق) என்ற வார்த்தையின் மூலம்தான் இமாம் தஹபி விமர்சனம் செய்துள்ளார். தஹபியின் ஒரே மாதிரியான விமர்சனத்தை குலைப் விஷயத்தில் ஏற்றுக் கொண்டவர்கள், அம்ர்பின் ஹாரிஸ் விஷயத்தில் ஏற்க மறுப்பதும், மறைப்பதும் ஏன்?)

அம்ர் பின் ஹாரிஸ் குறித்து தஹபி அவர்கள் இருவேறு கருத்துகளை கூறியுள்ளார். இதில், நம்பகமானவர் என்ற கருத்தே பிந்தியதாகும். 'நேர்மை அறியப்படவில்லை' என்ற கருத்துதான் பிந்தியது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், தஹபி அறியவில்லை என்று கூறியதால், உலகில் உள்ள யாருக்கும் அமர் பின் ஹாரிஸ் அறியப்படாதவர் என்று ஆகி விடுமா?.

'இமாம் திர்மிதி அவர்கள் அறியப்படாதவர்' என பிரபல ஹதீஸ் கலை அறிஞர் இப்னு ஹஸ்ம் கூறியதாக தஹபின் மிஜானுல் இஃதிலால் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஹஸ்ம் இவ்வாறு கூறியதால், இமாம் திர்மிதி அவர்கள் யாருக்கும் அறியப்படாதவர் என்று ஆகிவிட்டாரா?

காரணம், அறிவிப்பாளர்கள் ஆய்வில் தஹபியை விட சிறந்து விளங்கிய இப்னு ஹிப்பான் அவர்கள், 'அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையான அறிவிப்பாளர்' என 'ஃதிகாத்' எனும் தனது நூலில் சான்று தருகிறார். 'அம்ர் பின் ஹாரிஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்' என இமாம் இப்னு ஹஜ்ர், 'தக்ரீப் தஹ்தீப்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
அல் ஜர்ஹ் வத்தஃதீல் என்ற நூலிலும், தஹ்தீபுல் கமால் என்ற நூலிலும் அம்ர் பின் ஹாரிஸின் வரலாறு கூறபட்ட இடத்தில் அவர் குறித்து ஒரு குறையும் பதிவு செய்யப்படவில்லை.

திரிப்பு வேலையில் ஈடுபட்டு மக்களை திசை திருப்பாமல் இருக்க அம்ர் பின் ஹாரிஸ் பற்றி இக்கலை அறிஞர்கள் கூறியதை அவர்களின் நூலிலிருந்து அப்படியே அரபி மூலத்துடன் தந்துள்ளோம்.


 [5001] عمرو بن الحارث بن الضحاك الزبيدي بضم الزاي الحمصي مقبول من السابعة بخ د  تقريب التهذيب ج1/ص419
 [4136] عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د  الكاشف ج2/ص73
   14548 عمرو بن الحارث بن الضحاك الحمصي يروى عن عبد الله بن سالم الأشعري عن الزبيدي روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن زبريق وأهل بلده مستقيم الحديث (الثقات لإبن حبان)
   4339 بخ د عمرو بن الحارث بن الضحاك  الزبيدي الحمصي وعداده في الكلاعيين روى عن عبد الله بن سالم الأشعري الحمصي بخ د روى عنه إسحاق بن إبراهيم بن العلاء الزبيدي المعروف بزبريق بخ ومولاته علوة وقال محمد بن عوف الطائي د قرأت في كتاب عمرو بن الحارث ذكره بن حبان في كتاب الثقات روى له البخاري في الأدب وأبو داود ( تهذيب الكمال)
   1253 عمرو بن الحارث بن الضحاك  الزبيدي الحمصي روى عن عبد الله بن سالم الأشعري روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن الضحاك الزبيدي سمعت أبى يقول ذلك (الجرح والتعديل)

இப்னு ஹிப்பான் கூறுவது தவறா?

'ஒருவரை நம்பகமானவர்' என்று கூறுவதில் இப்னுஹிப்பான் கவனக் குறைவாகவும், தனக்கு தெரியாத வர்களையும் கூட நம்பகமானவர் என்று கூறிவிடுவார் என்றொரு குற்றச்சாட்டு இப்னு ஹிப்பான் மீது கூறப்படுகிறது. அதனைக் காரணம் காட்டி, அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் கூறிய கருத்தை புறக்கணிக்க முயற்சி செய்யலாம். எனவே, அதற்கான பதிலையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இக்குற்றச்சாட்டு பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் பயன்படுத்துகின்ற வாசகத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும் என அல் முஅல்லிம் அல் யமானி என்ற இக்கலை அறிஞர், அத்தன்கீல் பிமாஃபி தஃனீபில் கவ்ஃதரி என்ற தனது நூலின் முதல் பாகத்தில் 66, 437, 438 ஆகிய பக்கங்களில் கூறி விட்டு, இப்னு ஹிப்பான் 'நம்பகமா னவர்' என்று கூறுவோரை ஐந்தாக வகைப்படுத்துகிறார்.


إن توثيق إبن حبان على درجات:
الأولى:   أن يصرح به كما أن يقول كان متقناً أو مستقيم الحديث أو نحوه. (2)  أن يكون الرجل من شيوخه الذين جالسهم وخبرهم. (3)  أن يكون من المعروفين بكثرة الحديث بحيث يعلم أن إبن حبان وقف له على أحاديث كثيرة. (4)  أن يظهر من سياق كلامه أنه قد عرف ذلك الرجل معرفة جيدة.
(5)  ما دون ذلك.
فالأولى لا تقل عن توثيق غيره من الأئمة بل لعلها أثبت من توثيق كثير منهم.  والثانية قريبة منها. والثالثة : مقبولة.  والرابع صالح. والخامسة لا يؤمن  فيها الخلل. (التنكيل بما في تأنيب الخطيب الكوثري من الأباطيل ج1/438,437,66 )

'நம்பகமானவர்' என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுவது பல (5) படித்தரங்களை கொண்டுள்ளது.

1. 'மிக்க உறுதியானவர்', 'நேர்மையான அறிவிப்பாளர்' போன்ற தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி உறுதி செய்பப்பட்டவராக இருப்பர்.

2. அவர்களுடன் அமர்ந்து அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட இப்னு ஹிப்பானின் ஆசிரியர்களாக இருப்பர்.

3. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் என இப்னு ஹிப்பான் அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர்களாக இருப்பர்.

4. இப்னு ஹிப்பான் பயன்படுத்துகின்ற வாசகத்தின் மூலம், அவர்களை இவர் நன்கு அறிந்து கொண்டுள்ளார் என்பது விளங்கும்.

5. மேலே கூறப்பட்ட தரத்தில் எதிலும் இடம் பிடித்தவர்களாக இருக்கமாட்டர்.

இந்த ஐந்து வகையில், முதல் முறையில் கூறப்பட்டிருப்பவர்கள், ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களின் 'நம்பகமானவர்' என்ற கூற்றுக்கும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப்போனால், இக்கலை அறிஞர்களின் அதிகமானோரின் கூற்றை விடவும் இப்னு ஹிப்பானின் இவ்வகையான கூற்று மிக உறுதியானதாகும். (அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் முதல் வகையான வாசகத்தை குறிப்பிட்டே அவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

இரண்டாவது வகை இதற்கு நெருக்கமானதாகும். (அதனையும் சான்றாக ஏற்கலாம்.)

மூன்றாவது வகை 'ஒப்புக்கொள் ளப்பட்டவர்' என்ற தரத்தில் உள்ளவர்(அதாவது வேறொருவர் சான்றளித்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார் என்பது அதன் அர்த்தம்.)

நான்காவது 'பராவாயில்லாதவர்' என்ற தரத்தில் உள்ளவர்.

ஐந்தாவது வகையினர் குறைபாடுகள் இல்லாதவர்கள் என கூறமுடியாது. (தன்கீல்:1/66, 437, 438.)

இந்த வகையில் முதல் வகையைச் சார்ந்தவர்தான் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர். எனவே, அவரை பலவீன மானவர் எனக் கூறி தவிர்க்க முடியாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

எனவே, இப்னு ஹிப்பான் ஒருவரை நல்லவர் என்று கூறினால், அதை ஏற்க கூடாது என பொத்தாம் பொதுவாகக் கூற முடியாது.

மேலும், தஹ்தீபுல் கமாலின் ஆசிரியர், இப்னு ஹிப்பான் கூறியதை ஏற்று தனது நூலிலும் பதிவு செய்துள்ளதன் மூலம், அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையானவர், நம்பகமானவர் என்பதை தஹ்தீபுல் காமாலின் ஆசிரியரும் உறுதி செய்கிறார். இவ்வாறு, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர், அபுல் ஹுஜ்ஜாஜ், தஹபி ஆகிய பலரும் அம்ர் பின் ஹாரிஸ் அவர்களின் நம்பகத் தன்மையை குறை கூறாத போது, இவர்கள் மட்டும் ஏன் அம்ர் பின் ஹாரிஸ் பற்றி தவறான செய்தியை தந்து மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள் என்பதின் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்.

அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தார் நம்பகமானவர்களா?

'அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டை அவரிடமிருந்து நேரிடையாக அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடமிருந்து வாசித்ததாகவே இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மையே நிரூபணம் ஆகாத நிலையில் அவரது குடும்பத்தினரின் நம்பகத்தன்மை எத்தகையது என தெரியாது. இந்நிலையில் வேறொரு ஏட்டை எடுத்துக்காட்டி இதுதான் அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏடு என அவரது குடும்பத்தார் கூறியிருக்கலாம். இதன் அடிப்படையிலும் அபூ தாவூத்தின் அறிவிப்பு பலவீனம் அடைகிறது" என்பதே அவர்களின் துணைக் குற்றச்சாட்டு.

பதில்:

அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினர் நம்பகமானவர்களா? இல்லையா? என்ற ஆய்வில் இறங்கினால், புஹாரி, முஸ்லிம் போன்ற எல்லா நூற்களையும் நாம் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். காரணம் இவர்கள் தங்கள் நூற்களை தொகுத்து தங்களது வீட்டில்தானே வைத்திருந்திருப்பார்கள். அவர்களது குடும்பத்தினரைப் பற்றி சந்தேகம் கொண்டால், இந்நூற்களையும் கூட ஏற்க முடியாதுதான்.

எனவே, நம்பகமான (அம்ர் பின் ஹாரிஸ்) ஒருவரிடம் வேறொரு நம்பகமானவரின் (அப்துல்லாஹ் பின் சாலிம்) நூல் இருந்தது. அந்நூலிலிருந்து அபூதாவூத் அவர்கள் பதிவு செய்த இந்த ஹதீஸை ஏற்கத்தான் வேண்டும். வேறொரு நூலைப் பார்த்து விட்டு, தவறாக பதிவு செய்திருப்பார் என சந்தேகம் கொள்வது அபூதாவூத் அவர்களின் நம்பகத்தன்மையை குறை கூறுவதாக அமையும்.

இவ்வாறு அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினரிடம் இருந்த நூல் அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் ஏடுதான்' என தஹபி, (மிஜானுல் இஃதிதால்) அபூதாவூத் ஆகிய இரு நம்பகமானவர்கள் ஊர்ஜிதம் செய்வதால், அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் நூலை தம்மிடம் வைத்துக் கொண்டு வேறொரு நூலை எடுத்துக்காட்டி இருப்பார்கள் என்பது இவர்களின் வெறும் யூகம் தான். யூகம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்பது குர்ஆன் வசனம்.

மேலும், 'ஆல்' என்ற வார்த்தை ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் கூறப்படுவது போலவே அவரையும் அவரைச் சேர்ந்தவர்களை குறிக்கவும் பயன்படுத்தவும். அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தினர் எனும்போது அவரும் குடும்பத்தினரில் உள்ளடக்கும். இந்த அடிப்படையில், குடும்பத்தினரிடம் இருந்து வந்த நூல் என்பதற்கு அவரிடம் இருந்து வந்த நூல் எனப் புரிந்து கொள்ளத் தடை ஏதும் இல்லை.

பிறரின் நூலிலிருந்து ஹதீஸை பதிவு செய்வது ஏற்புடையதா?

தனக்கு அறிவிப்பவரை குறிப்பிடாமல் வேறொருவரிடம் இருந்த அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாக அபூதாவூத் குறிப்பிடுகிறார். இம்முறையில் பதிவு செய்த ஹதீஸை ஏற்கலாமா?

ஒருவரிடம் நேரிடையாக கேட்காமல் அவரின் நூலிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களை இமாம் புகாரி, முஸ்லிம் அவர்கள் தங்களது நூற்களில் பதிவு செய்து ள்ளார்கள். 1286-வது ஹதீஸில்

قال مسلم: سمعت يحيى بن يحيى يقول: كتبت هذا الحديث من كتاب سليمان بن بلال.

முஸ்லிம் அவர்கள் கூறுகிறார்கள்:
யஹ்யா பின் யஹ்யா அவர்கள் கூறினார்: இந்த ஹதீஸை (1286) சுலைமான் பின் பிலால் அவர்களின் ஏட்டிலிருந்தே நான் எழுதினேன்.

இம்முறையில் அறிவிக்கப்பட்ட ஹதீஸை 2833, 2965, 3024, 3025, 5828, 7237 ஆகிய இடங்களில் இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார்கள்.

குற்றச்சாட்டு -3

"இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை. நபித்தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை. "நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், "நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின்படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை. அல்லது ஒரு நபித்தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை. தத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவுகோல் கூறப்பட்டுள்ளது. நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை."

இந்த நபிமொழி பலவீனமானது என்பதற்கான இவர்களின் மற்றொரு குற்றச்சாட்டு.

அப்துல்லாஹ் பின் முஆவியா ஒரு நபித்தோழரே.

யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அளவுகோலை கையில் எடுத்துக் கொண்டு ஒரு நபித்தோழரை, நபித்தோழர் அல்லர் என வாதிப்பது அறிவுடமையாகாது. மேலும், இவர்களே, 'நபித் தோழர் என சில நூற்களில் கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை' என ஆதங்கத்துடன் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டதாக நினைப்பது போல, அறிவுக் கண்ணை மூடிக் கொண்டு, உண்மை புரியவில்லை என்று இவர்கள் கூறவதால், உண்மைப் பொய்யாகிவிடுமா? இவர்களுக்கு தெரியவில்லை என்பதால், யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?
அப்துல்லாஹ் பின் முஆவியா(ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர் என்றே பெரும்பாலான நூற்களில், அடை யாளங்காட்டப்பட்டுள்ளார் குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய நபித்தோழருக்கான அளவுகோலை விவரிக்கும் தத்ரீப் என்ற நூலிலும்கூட நபித் தோழர் அல்லர் என கூறப்படவே இல்லை.

அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்ட இவர்கள் மேற்கோள்காட்டும் எல்லா நூற்களிலும், நபித்தோழர் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளார்.

'நபித் தோழர்' எனக் கூறிய நூற்கள் பட்டியல் இதோ!

1. இல் இஸாபா.
2. தஹ்தீபுத் தஹ்தீப்.
3. தக்ரீபுத் தஹ்தீப்
4. மிஜானுல் இஃதிலால்.
5. அல் காஷிப்
6. தஹ்தீபுல் கமால்
7. முஃஜமுஸ் ஸஹாபா
8. அல் ஃபிர்தவ்ஸ் பிமஃதூரில் கிதாப்.
9. அல் ஜர்ஹ் வத்தஃதீல்.
10. அவ்னுல் மஃபூத்
11. அத்தபகாத்துல் குப்ரா.
12. அல் இஸ்திஆப்.
13. இமாம் புகாரி அவர்களின் தாரிக் அல் கபீர்.

இப்னு ஹிப்பான், அபூ ஹாதிம் அர்ராஜி ஆகியோரும் அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இமாம் புகாரி உட்பட ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் நபித் தோழர் எனக் கூறப்படும் ஒருவரை, தங்களது கருத்திற்கு எதிரான ஒரு செய்தியை அறிவிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நபித்தோழர் அல்லர் என்று சாதிக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று கூறுவது.

இந்த ஒரு ஹதீஸைத்தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை என்றொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள். இதனை சரியென ஒப்புக் கொண்டால், ஒரு ஹதீஸைத் தவிர வேறு எதிலும் இடம் பெறாத நபித் தோழர்கள் என நீண்டதொரு பட்டியல் உண்டு. அவர்களையெல்லாம் நபித்தோழர்கள் அல்லர் என்று கூறுவார்களா? ஒரு ஹதீஸைக் கூட அறிவிக்காத பல நபித்தோழர்களும் உள்ளனர். அதனால், இவர்களை நபித்தோழர்கள் அல்லர் என்றுதான் கூற முடியுமா?

பரவலாக அறியப்படாதவரா?

அப்துல்லாஹ் பின் முஆவியா நபித்தோழர் என பரவலாக அறியப்படாதவர் என்ற வேறொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள்.

1. அப்துல்லாஹ் பின் ஹர்மலா அல்முத்லஜி (عبد الله بن حرملة المدلجي)
2. ஷிஹாப் பின் அல் மஜ்னூன் (شهاب بن المجنون الجرمي)
3. கத்தாஷ் பின் அபீ கத்தாஷ் (خداش بن أبي خداش)
4. ரக்ப் அல் மஸ்ரியீ (ركب المصري)
5. ஷத்தாத் பின் ஷர்ஹபீல் (شداد بن شرحبيل)
6. ஷத்தாத் பின் ஃதுமாமா (شداد بن ثمامة)
7. அம்ர் பின் மஃதீகரிப் (عمرو بن معديكرب)
8. கைஸ் பின் அல் ஹாரிஸ் (قيس ين الحارث)
9. யஃகூப் பின் அல் ஹுஸைன் (يعقوب بن الحصين)
10. அபூ ஹிந்த் அல் பஜலி (أبو هند البجلي)
11. அல் ஹாரிஸ் பின் முகல்லத் அல் அன்ஸாரி (الحارث بن مخلد الأنصاري)
12. அப்துல்லாஹ் பின் மாயிஜ் அத் தமீமிய்யீ(عبد الله بن ماعز التميمي)
13. முஆவியா பின் முஆவியா அல் முஜ்னியீ (معاوية بن معاوية المزني)

ஆகியோர் நபித் தோழர்கள் எனக் கூறப்படுகின்றனர். ஆனால், நபித்தோழர்களில் அவர்கள் பிரபலமாகாதவர்கள் என்ற மறுப்புரையை அல் இஸாபா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் இப்னு ஹஜர் அவர்கள், 'அப்துல்லாஹ் பின் முஆவியா' ஒரு நபித் தோழர்தான் என அழுத்தமாக கூறியுள்ள தன் மூலம், இமாம் இப்னு ஹஜர் காலத்தில், நபித்தோழர்தான் என பரவலாக அறியப்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகிறது.

வட இந்தியாவில் உள்ள ஒருவர், சென்னையில் பிரபலமாக உள்ள ஒருவரை, 'பிரபலமாகாதவர்' என விமர்சனம் செய்தால் அது அவரின் அறியாமை. அதுபோல, 21வது நூற்றாண்டில் வாழ்ந்து வரும் ஒருவர், 14-ம் நூற்றாண்டிலும், அதன் பிறகும் பிரபலமாக இருந்து வந்த ஒரு நபித்தோழரை 'பிரபலமாகாதவர்' என்று விமர்சிப்பது மாபெரும் கேலிக் கூத்தாகும்.

ஹதீஸ்கலை அறிஞர்களால் இந்த விமர்சனம் கூறப்பட்டுள்ளதா? அல்லது சந்தேகம் என்றாவது கூறியுள்ளார்களா? என்றால் அவ்வாறு ஒருவரும் கூறவில்லை.

விலைபோகாத மூன்று குற்றச்சாட்டுகள்:

ஆக, அபூதாவூதின் அறிவிப்பின் மீது இவர்கள் சுமத்திய மூன்று குற்றச்சாட்டுகளும் நாம் அளித்த தெளிவான விளக்கத்தின் மூலம், ஒன்றன் பின் ஒன்றாக வேரறுந்து விழுந்து விட்டதால், இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதான் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த நபி மொழி சரியான சான்றாக விளங்குகிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

20] வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்

சான்றாய்வு -7

ஒரே பொருளுக்கு வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்

'ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்பட வில்லை. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என ஒரு ஹதீஸை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்' என சவால் விட்டுப் பேசி வருகிறார்கள்.

ஒரு லட்சம் என சவால் விட்டுப் பேசி விட்டதால் அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாக அர்த்தமாகிவிடாது. வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு ஹதீஸை எடுத்துக் காட்டியப் பின்பும் அதனைப் பலவீனம் எனக் கூற காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களின் போலித் தனத்தை காட்டுகிறது.

ஜகாத் கொடுங்கள்!

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ) (البقرة:110)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஜகாத்தை வழங்குங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயம் அல்லாஹ் பார்க்கிறான். (2:110)

தொழுகையைப் பற்றிக் கூறப்படும் வசனங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே கூறப்படுகிறது.
ஆனால், எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற அளவு காலம் பற்றி குறிப்பிடாமல், ஜகாத் கொடுங்கள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனினும், ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்), எவ்வளவு வழங்க வேண்டும், (சதவிகிதம்) எப்போது வழங்க வேண்டும் ஆகிய அனைத்திற்கும் இறைத்தூதர் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள்.

அளவு நிர்ணயம்

ஒருவன் மீது ஜகாத் கடமையாவதற்கான செல்வத்தின் உச்ச வரம்பை நிஸாப் என்று கூறப்படும். வெள்ளி, விளைபொருள், கால்நடை ஆகிய ஒவ்வொன்றிற்கும் நிஸாபை தீர்மானித்து தெளிவுபடுத்திய நபி மொழிகள் ஏராளம். அவற்றில் சில!


 1459- عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ  رضى الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ e  قَالَ « لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ »رواه البخاري

"ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை. ஐந்து ஊக்கியாக்களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில் ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்ற