Sunday, January 22, 2006

அரைக்கால் டவுசரில் தொழுகையா? (ஆய்வு)

ஓர் ஆண் தொழுகையில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடையின் அளவு குறித்து கவன ஈர்ப்புச் சட்டம் ஒன்றை சமீபகாலத்தில் வெளியிட்டு இவர்கள் நடத்தும் விண் டீ.வியில் தொடை தெரிய ஆடும் டான்ஸுகளுக்கு இவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கவும், மேலும் வித்தியாசமான கோணத்தில் ஒரு கருத்தைக் கூறி, அதை பரபரப்புச் செய்திகளாக (Sensenational News) பத்திரிக்கை மற்றும் சி.டிகளில் வியாபார நோக்கில் வெளியிட்டு, சந்தடிசாக்கில் குளிர்காய்ந்து (காசாக்கி) வருகிறார்கள் என்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் குர்ஆன் மற்றும் நபிமொழியில் இதனை ஆராய்வோம்.

கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட ஒரு சட்டத்தை தூசி தட்டி கையில் எடுத்துக் கொண்ட இம்மாமேதைகள், வழக்கம் போல இச்சட்டத்தை விளக்குவதிலும் மறைத்தல், திரித்தல், சான்றுகளில் தங்களுக்குச் சாதகமானதை எடுத்துக் கொண்டு எதிரானதை வளைத்தல் ஆகியவற்றில் தங்களது கை வரிசையைக் காட்டுவதில் இம்முறையும் சளைக்கவில்லை.

இறைவசனத்திலும், இறைத்தூதரின் வாக்கிலும் இவர்கள் செய்த தில்லு முல்லுகள், மொழிபெயர்ப்புகளில் செய்த மோசடிகள், முன்னுக்குப் பின் பேசி வரும் முரண்பாடுகள் என அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் பலராலும் பட்டியலிட்டு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டாலும், விட்டேனாபார் என்ற ரீதியில்தான் பேசியும், எழுதியும் வருகிறார்களே தவிர, மனிதர்கள் என்ற வகையில் தங்களிடமும் தவறுகள் ஏற்படும், அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் இவர்கள் சிந்தித்ததில்லை.

பிறரைக் குறை கூறியே தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்ற இவர்கள் குர்ஆனுக்கு செய்த மொழி பெயர்ப்பில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய போது, .....யின் தர்ஜுமாவில் தவறுகளா? என்ற தலைப்பில் பல சி.டி.களைப் போட்டு காசாக்கினார்களே தவிர, இத்தலைப்பில் உள்ள ஆணவப் போக்கினைக் கவனிக்கத் தவறி விட்டார்கள். இறைத்தூதர் வாழ்ந்த காலத்திலேயே தன்னை நபி என பிரகடனப்படுத்திக் கொண்ட போலியான முஸைலமாவிற்குப் பின் ஒரு சிறிய கூட்டம் இருந்தது எனும் போது தனிமனித வழிபாட்டினை விரும்பும் ஒரு சிறிய கூட்டம் இருப்பது கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது விருப்பு, வெறுப்பின்றி அதனை சீர் தூக்கிப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், சுட்டிக் காட்டியோரை ஜென்ம விரோதிகளாக நினைத்து, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விமர்சிப்பவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதோடு, தனிமனிதன் பற்றிய தரம் கெட்ட விமர்சனத்திலும் ஈடுபடுகிறார்கள்.

ஓர் ஆண் தன் உடலில் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி குறித்து எழுதிய இவர்களது கருத்திலுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியோரை நோக்கி, 'அவர்கள் சாக்கடைகள்' என்பது போன்ற தரம் கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தங்களின் தரத்தை மீண்டும் கீழே இறக்கிக் கொண்டார்கள்.

எனவே, இவர்கள் கூறிய இந்த டவுசர் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்கள் கூற்றில் எந்தளவு உண்மை உள்ளது, சான்றுகளை எவ்வாறு திரித்து கூறியுள்ளார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம். மேலும்...