Tuesday, November 21, 2006

பி.ஜே.வுடனான விவாத ஒப்பந்தம்

20.11.2006 அன்று கையெழுத்தான விவாத ஒப்பந்தம்

விவாத ஒப்பந்த நாள் அன்று எடுக்கப்பட்ட வீடியோ

Tuesday, May 09, 2006

சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டது யார்?

சவூதியின் சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தது யார்?

பல் வேறு மதங்களை, மொழிகளை கொண்ட பல நாட்டு மக்களும் தங்களது இவ்வுலக வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் செல்வம் கொழிக்கும் சவூதி அரேபியாவுக்கு வந்து பல்வேறு வேலைகள செய்து வருகின்றனர். இவர்களில் இறைவனையும், மறுவுலக வாழ்வினையும் குறித்து ஒன்றும் அறியாதவர்களாக பலர் உள்ளனர். அவற்றை மறுப்பவர்களும் உண்டு. இறைவனும், மறுமையும் உண்டு என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாவர்கள் என்ற பிரிவினரும் உண்டு.

எல்லா உலக மக்களுக்கும் தூய இஸ்லாத்தின் போதனைகளை எடுத்துரைக்க வேண்டியது தமது கடமை என்றுணர்ந்த சவூதி அரேபியாவின் நன்மக்கள் பலர், செல்வம் தேடி வந்த இம்மக்களுக்கு அழியாத செல்வத்தையும் அள்ளி வழங்க வேண்டும் என்று கருதி, சவூதி அரசின் துணையுடன் குர்ஆனையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய போதனை மையங்களை ஆங்காங்கே நிறுவி, ஒவ்வொரு மொழியிலும் அப்போதனை எடுத்துரைப்பதற்காக அம்மொழியில் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் மார்க்கம் பயின்ற பல அறிஞர்களையும் பணியில் அமர்த்தி அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையங்களின் தூய எண்ணங்களை புரிந்து கொள்ளாத புல்லுருவிகளில் சிலர் இப்பொறுப்பாளர்களுக்கு மாற்று மொழிகள் தெரியாது என்பதை தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு, இஸ்லாத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மாபாதகச் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்ததை பிறர் மூலம் கையும் களவுமாகப் பிடிபட்டு களையெடுக்கப்பட்ட சம்பவங்கள் பல இடங்களில் உள்ள இதுபோன்ற நிலையங்களில் நடந்தேறியுள்ளன.

இந்த அடிப்படையில்தான் சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் நகரில் மார்க்கத்தை முறையாக பயிலாத சிலர் ஒரு தனிமனிதரின் சுயவிளக்கங்களை மட்டும் கேட்டு விட்டு, இஸ்லாத்தை அரை குறையாகப் புரிந்த கொண்டு சிலரின் தயவால் அழைப்பாளர்(?) பணிக்கு வந்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர். இவர்களால் மக்கள் அடையும் பயனை விட தீமைகளும் வழிகேடுகளும்தான் அதிகம் என்பதால், இந்நிலையத்தின் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்டது. குர்ஆன் சுன்னாவிற்கு எதிரான இவர்களது நிலைபாடுகள், இயக்கங்களின் பெயரால் இஸ்லாமியர்களை கூறு போட்டு வருவது ஆகியவற்றை பொறுப்பாளர்கள் அறிந்து அவரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது,
தனது குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற அதிர்ச்சியில், மூன்று நாட்களாக தூக்கத்தை இழந்து சவூதியின் சொகுசு வாழ்வினை பொய்யுரைத்தேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தரங்கெட்ட முடிவிற்கு வந்து விட்ட இந்த புல்லுருவிகள், ஷிர்க்கிற்கு நான் துணை போவதாக அபாண்டமான பழியை என் மீது சுமத்தி ஆத்ம திருப்தி அடைந்து கொண்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நான் ஷிர்க் மற்றும் பித்அத்களை பகிரங்கமாக எதிர்த்து எழுது வேண்டும், சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்ட இவர், தமது தலைமை வெளியிடும் தவறான குர்ஆன் சுன்னாவிற்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக எதிர்த்து எழுத வேண்டும், என்ற கோரிக்கையை இஸ்லாமிய நிலையங்களின் பொறுப்பாளர்கள் முன் வைத்த போது,

அவ்வாறே இருவரும் எழுதுவதாகச் சம்மதித்து நான் வாக்களித்த படி பகிரங்கமாக கோணல் புத்தியில்லாமல் ஷிர்க்கிற்கு எதிரான எனது நிலைபாட்டை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டேன். அதனை வாசிப்போர் நன்கு அறிவார்கள்.

ஆனால், சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டவர்கள், இரு தலைக் கொல்லியாக சரியாக மாட்டிக் கொண்டதால், பாம்பிற்கு தலையும், மீனுக்கு வாலும் என்ற ரீதியில் எழுதி தமது சொகுவு வாழ்வினை தக்க வைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்து வருகிறார்கள்.

சொகுசு வாழ்வினை இப்படித்தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இறைவனே இல்லை என்று மறுப்பாளர்களும் கூட இந்த சொகுசு வாழ்வில் மிதந்து வருகிறார்கள். உண்மையில் இவர்களிடம் கொள்கைப் பிடிப்பும், ஈமானிய உரமும் இருந்திருக்குமேயானால், தான் சரியென கருதி வந்த, அதற்காக ஆள் சேர்த்து வருகின்ற கொள்கையைக் காப்பதற்காக வேலையைத் தூக்கி எறிய வேண்டுமே தவிர, சொகுசு வாழ்விற்கு காரணமான வேலையை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் நம்பியிருக்கும் கொள்கையை விலை பேசியிருக்கக் கூடாது. ஆனால் நடந்தது என்ன? த.த.ஜ.வின் கொள்கையை விலை பேசிவிட்டார்கள். இது போன்ற புல்லுருவிகளை த.த.ஜ. தலைமை ஏற்குமா? எதிர்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாற்றுக் கொள்கையுடைவர்களின் மேடைகளில் பிரச்சாரம் செய்யவே மாட்டோம் என்று உரத்துக் கூறி வரும் த.த.ஜ.வை சார்ந்த இவர்கள், தங்களது கொள்கைகளை பகிரங்கமாக எதிர்க்கும் ஸலஃபு கொள்கையுடைய அரபு மண்ணில் இருந்துக்கொண்டு எந்த அழைப்புப் பணி மையத்தில் இடம்கொடுப்பார்கள் என்று அலைவது ஏன்?

வேலை பறிபோய் விடுமோ என்றஞ்சி தனது தலைமை கூறிவரும் தவறான கருத்துக்களில் பல செய்திகள் தனக்குத் தெரியாது என்று பொய் சொல்லி சாதித்துள்ளார்களே ஏன்? இதுதான் இவர்களின் கொள்கைப் பற்றா? காசு என்றதும் கொள்கை காற்றில் பறந்து விடுமோ?

(சகோதரர் பி.ஜே. மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நாம் கூறியவை அல்ல!

...மேற்கண்ட குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் அல்லாஹ்விற்காக அக்கருத்துக்களை ஒருகாலும் ஆதரிக்கமாட்டோம் என உரத்துக் கூறுகிறோம்)


என்று எழுதியுள்ளார்களே இதன் அர்த்தம் என்ன?

தமது இயக்கத்தின் தலைவர் பி.ஜே. கூறிவருவது ஒன்றும் தெரியாது என்று சாதிப்பது எதற்காக? சொகுசு வாழ்வு பறிபோய்விடும் என்பதாலா?

ஷிர்க்கை ஆதரிப்பதாக என் மீது இவர்களால் சுமத்தப்பட்ட களங்கத்தை மறுக்கும் விதத்தில் பகிரங்கமாக ஷிர்க்கை எதிர்த்து நான் எழுதியுள்ள நிலையில், தனது தலைமை வெளியிடும் தவறான கருத்தை பகிரங்கமாக எதிர்ப்பதாக ஒப்புக் கொண்டு, இறுதியில் அது குறித்து தனக்கும் ஒன்று தெரியாது என மழுப்பலாக எழுதியிருப்பதன் உள் நோக்கம் என்ன? மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்ட இவர்கள், அரபு சேக்குகளை திருப்தி செய்து காசு பார்க்க வேண்டும் என்பதற்காக, இப்னு தைமிய்யா எழுதிய நூலை தன் தலைவர் பீ.ஜே. பார்வையிட்டிருக்க வேண்டும் என்று சில புத்திமதிகளை அள்ளித் தெளித்துள்ளார். இதன் மூலம் ஆய்வுகள் செய்யாமல் தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறார் தன் இயக்கத் தலைவர் என்று இவர்கள் சுமத்திய பகிரங்கமான இக்குற்றச்சாட்டை ஏற்கிறதா த.த.ஜ.வின் தலைமை? அல்லது இவ்வாறு கூறியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா? அல்லது தங்களது இயக்கதிற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தால் போதும், அவர்கள் மீது எந்த ஒழுங்க நடவடிக்கையும் எதுவும் எடுக்க மாட்டோம் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்களா?

சகோதரர் பி.ஜே. அவர்கள் சில நபித்தோழர்களை ஏசுவதாகவும் குறிப்பாக அம்ர் பின் ஆஸ் (ரலி)அவர்களை கிரிமினல் என்று கூறுவதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. .... நபித்தோழர்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதே உண்மையான குற்றமாகும். இதை நாம் ஒருக்காலும் ஆதரிக்கமாட்டோம் என்று தன் தலைவர் நபித்தோழர்கள் விஷயத்தில் குற்றம் புரிந்து விட்டதாக பகிரங்கமாக வாதிக்கிறார்களே! அதனை அவர்களின் தலைமை ஏற்கிறதா?

ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் என்று பி.ஜே. கூறுவதாக, நபித் தோழர்களை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக தமது தலைமையின் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இவர்களது குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவரது தலைமை இவ்வாறு கூறியிருப்பது உண்மைதான் என்பது ஊர்ஜிதமாக தெரிய வந்தால் அதை பகிரங்கமாக எதிர்ப்பதாகவும் சொகுச வாழ்விற்கு ஆசைப்பட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சூரியனைப் போல் பகிரங்கமாக உள்ள ஒன்றை தனக்கு தெரியாது என்று காரணம் காட்டி மறைக்க முயல்கிறார் சொகுச வாழ்வு விரும்பி. தலைமை கூறியிருப்பது உண்மைதான் என்பதாலும், தலைவர் கூறியிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்த்தில அதனை எதிர்ப்பதாக கருத்து வெளியிட்ட தன் தொண்டரின் மீது நடவடிக்கை எடுக்கமா? பொறுத்திருந்து பார்ப்போம்.த.த.ஜ. மவ்லவி இப்ராஹீம் காசிமியின் கடிதம்என்னுடைய கடிதம்:

இணை வைத்தலை இறைவன் மன்னிக்கவே மாட்டான்

(إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْماً عَظِيماً) (النساء:48)

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக இறைவன் மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற) எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவர் மிகப்பெரும் பாவத்தை பொய்யாக கற்பனை செய்துவிட்டார் (அல்குர்ஆன் 4:48)

பெரும் பாவங்களிலேயே மிகக் கொடூரமான பாவம் தன்னை படைத்த இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். 'இணை வைத்தல்' என்ற இந்த செயல் யாரிடத்திலும் அது எந்த வடிவத்தில் ஏற்பட்டாலும் அதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். குறிப்பாக தன் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்டால் கூட அதனை கண்டிக்க எவ்விதத் தயக்கமும் காட்டக்கூடாது.

பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் இருந்தாலும், இணை வைக்கும் காரியங்களைச் செய்யத் தூண்டினால், அதற்கு உடந்தையாக செயல்பட வற்புறுத்தினால் அதற்கு உடன்படாமல் அதனை எதிர்க்க வேண்டும் என்பதையே 31வது அத்தியாயம் 15வது வசனத்தில் இறைவன் நமக்குப் போதிக்கின்றான். எனவே, இறைவனின் இந்த வழிகாட்டலை மையமாகக் கொண்டு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல் யாரிடமிருந்து ஏற்பட்டாலும் தயவு தாட்சண்யமின்றி வன்மையாக அதைக் கண்டித்து வருகின்றேன். கண்டிக்க வேண்டும் என்று என் பிரச்சாரங்களில் பிறரையும் வலியுறுத்தி வருகின்றேன்.

குறிப்பாக தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மௌலூத், சலவாத்துன் னாரிய்யா, கப்ர் வணக்கம் போன்ற இணை வைக்கும் அனைத்து செயல்களையும் மற்றும் மார்க்கத்தில் இல்லாத நவீன அனுஷ்டானங்கள் ஆகியவற்றையும் அது யார் செய்தாலும் அதை பகிரங்கமாகவே கண்டித்தும் வருகின்றேன். எழுத்தின் மூலமும், பிரசங்கத்தின் மூலமும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனி மனித சந்திப்புகள் என பல்வேறு முறைகளில் இந்த எதிர்ப்பை பதிவு செய்வதில் யாருக்கும் சளைத்தவனல்ல என்பதை நான் பல முறை நிரூபித்து வந்திருக்கின்ற அதே வேளையில், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சட்டம் கூறுவதாக நினைத்து தவறான வழிகாட்டலை செய்து வருவோரைக் கண்டிக்கவும் நான் ஒரு போதும் தயக்கம் காட்டியதில்லை என்பது பலரும் அறிந்த ஒன்றாகும். மிரட்டல்கள் மற்றும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அசத்தியங்களுக்கெதிரான என் போராட்டத்தை கைவிட்டு விடாமல் தொடர்ந்து செய்து வருகின்றேன். இனியும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறே செய்துவருவேன். அல்லாஹ் அதற்கு துணை புரிய வேண்டும்.

ஆனால், என் உறவினர்கள் இது போன்ற செயல்களை செய்து வருவதாகவும் அதனை எதிர்க்காமல் அவர்களின் இந்த செயல்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு பல வழிகளிலும் நான் பொருளாதார உதவிகள் செய்து வருவதாகவும் சிலர் வதந்திகளை மக்களிடையே பரப்பி வருகின்றார்கள்.

குறிப்பாக கறம்பக்குடியில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பத்ரிய்யா என்ற அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வரும் எனது மாமனார் அவர்களுக்கு இது விஷயத்தில் நான் உடந்தையாக இருப்பதாக ஆதாரமில்லாத செய்திகளை அள்ளிவிடுகின்றனர்.

என் மீது கூறப்படும் இக்குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கின்றேன். ஏனெனில் அக்கல்லூரியின் முதல்வர் தனது மகளின் திருமணத்தில் செய்த பித்அத்களை பகிரங்கமாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் நடத்திய அத்திருமண நிகழ்ச்சியையும் நான் முற்றிலுமாக புறக்கணித்து விட்ட உண்மையை அந்த ஊர் மக்களும், தாயிஃபில் பணிபுரிந்து வரும் இன்னும் பலரும், குறிப்பாக இப்போதும் தாயிஃபிலேயே பணிபுரிந்து வரக்கூடிய திருமண நிகழ்ச்சியின் நாயகனான மணமகனும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி நன்கு அறிவார்கள். உண்மை நிலவரம் இப்படியிருக்கையில் இணை வைப்பதற்கு நான் உடந்தையாக இருப்பதாக சித்தரிப்பது மாபெரும் அபண்டாமாகும்.

படைத்த இறைவனுக்கு இணை வைக்கும் செயலை யார் செய்தாலும் அவ்வாறு செய்வோர் என் உறவினர்களாக இருந்தாலும் அதனை கடுமையாக எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பேன் என்பதை இதன் மூலம் உளப்பூர்வமாகத் தெளிவுபடுத்திக் கொள்கின்றேன்.

இந்த செய்தியை இணைய தளத்திலும் வெளியிட்டு, இணைவைத்தல், நவீன அனுஷ்டானங்கள் ஆகியவற்றிற்கு எதிரான என் எதிர்ப்பலைகளை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பதிவு செய்துக் கொண்டே இருப்பேன் என்பதை இதன் மூலம் உறுதியாகத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இப்படிக்கு
நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

Monday, May 01, 2006

ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?

பெண்களின் ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அன்று:
ஓர் ஆண் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது குறித்து இறைத் தூதர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியலாம் என்று ஆண்களின் ஆடை அளவில் PJ அவர்கள் மாற்றிப் பேசினார்.

இன்று:
பெண்கள் கரண்டைகால் வரைதான் ஆடை அணியவேண்டும் அதற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்று பெண்களின் ஆடை விஷயத்தில் மாற்றிப் பேசுகிறார். பெண்கள் தங்களது முகம், கை ஆகியவற்றைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் மறைக்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் தனது மொழி பெயர்ப்பில் முன்பு எழுதியிருந்த PJ, இன்று அதற்கு முரண்பட்டு எழுதும் போதும் வேடிக்கை பார்க்கும் TNTJ அறிஞர்களே! ஆண்களின் ஆடைச் சட்டத்தை மாற்றும் போது மௌனம் காத்தீர்கள். இன்று பெண்களின் ஆடை சட்டம் மாறுகிறது. இறைமார்க்கத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை எடுத்து வைக்கும் போது மௌனிகளாக இருப்போர் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்காது என்ற எண்ணமா?

இஸ்லாத்தின் பெயரால் பெண்களின் ஆடை சட்டத்தை இவர்கள் கூறிவருவதால், குர்ஆன், நபிமொழிகளின் பார்வையில் இதன் நிலை என்ன? என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். மேலும்..